திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள செல்லம்மாள் நகரில் ஆபத்தான மின் கம்பத்தை மாற்றியமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்கிய மின்வாரிய ஊழியர்கள்.
பிச்சாண்டார் கோவில் ஊராட்சி செல்லம்மாள் நகர் வீதியில் உள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் எந்நேரம் வேண்டுமானாலும் விழுந்து விபத்து
ஏற்படும் அபாய நிலையில் இருந்தது. புதிய மின் கம்பத்தை மாற்றி அமைத்து பொதுமக்களின் அச்சத்தை போக்குமாறு மின்வாரிய அலுவலகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை குறித்து புதிய மின்கம்பம் அமைத்து தருமாறு மின்வாரிய அலுவலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமானகணேஷ் என்கின்ற விக்னேஷ்வரன் மின்வாரிய அலுவலர்களிடம் முறையிட்டார்.பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆபத்தான மின்கம்பத்தை மாற்றி புதிய மின் கம்பம் அமைத்து கொடுத்தனர்.
பொதுமக்களின் அச்சத்தை போக்கி புதிய மின் கம்பம் அமைத்துக் கொடுக்க உதவி புரிந்த
சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான கணேஷ் என்கிற விக்னேஸ்வரன் மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கும் , மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு செல்லம்மாள் நகர், சிவராம் நகர், பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும், தெரிவித்தனர்.