திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சிப் பகுதியில் உள்ள உத்தமர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. பூர்ணவல்லி தாயார் உடனுறை புருஷோத்தம பெருமாள், சௌந்தரபார்வதி உடனுறை பிச்சாடனேஸ்வரர், ஞானசரஸ்வதி உடனுறை பிரம்மதேவர் சுவாமிகள் உள்ள மும்மூர்த்திகள் உள்ள தலம் இது. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் மும்மூர்த்திகள் ஒரு சேரக்காட்சியளிக்கும் நிகழ்வான கார்த்திகை தீப விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி மும்மூர்த்திகள் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு
பூஜைகளுக்கு பிறகு தனித்தனியே சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதை தொடர்ந்து மும்மூர்த்திகள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.