கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள திருவக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் என்கின்ற அருண்பாண்டியன் (28). தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளது. இன்று காலை அருண்பாண்டியன் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனைப்பார்த்த, அந்தப் பகுதியை சேர்ந்தோர், உடனடியாக போலீஸாருக்கு இது குறித்த தகவல் அளித்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே இருந்த வீட்டின் அருகே சென்று நின்றது. இதையடுத்து, குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டது.