Skip to content
Home » வேற லெவல் கெட்டப்பில் விஜய்…. போட்டோஸ் வைரல்…

வேற லெவல் கெட்டப்பில் விஜய்…. போட்டோஸ் வைரல்…

  • by Authour

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜயின் GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்துக்கொண்ட செஃல்பி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

ஏஜிஎஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் GOAT எனப்படும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் இதில் விஜய் இரண்டு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்தில் மைக் மோகன், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, இவானா, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 13ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இந்நிலையில், GOAT படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில், விஜய் நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகிறார் வெங்கட் பிரபு. அப்போது தகவல் கிடைத்து விஜயை பார்க்க ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்கள் குவிந்தனர். இதனையடுத்து ரசிகர்களை படப்பிடிப்புத் தளத்தின் உள்ளே இருந்தே பார்த்து கையசைத்தார் விஜய். ரசிகர்களை விஜய் சந்தித்த வீடியோ வைரலாகி வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. அதில் விஜய் மீசை இல்லாமல் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் இருப்பதை பார்த்து அவரது ரசிகர்களே உற்சாகமடைந்துள்ளனர்.

விஜய் பெரும்பாலும் கெட்டப்களில் பெரிய வித்தியாசம் காட்டாமல், பெர்ஃபாமன்ஸில் மாஸ் சம்பவம் செய்வார். ஆனால் இப்போது வெளியான விஜய்யின் செல்ஃபியை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த போட்டோவை பார்த்து, பாசிட்டிவ் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *