தி இந்து ஆங்கில நாளிதழின் மூத்த புகைப்படக் கலைஞர் கே. வி. சீனிவாசன் ( 56), இன்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். உடனடியாக அவரது உடல் திருவல்லிக்கேணி டி.பி. கோயில் சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு சென்னை கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் நடக்கிறது.
அனைவரிடமும் நல்ல நட்பு கொண்டிருந்த .கே.வி.சீனிவாசன் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் அனைத்து மாவட்ட பத்திரிகையாளர் சங்கங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
இது குறித்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இரங்கல் செய்தி வெளியிட்டதுடன், சீனிவாசன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் குடும்ப நல நிதி உதவி வழங்க உத்தரவிட்டார். இதற்காக பத்திரிகையாளர்கள் அனைவரும் முதல்வருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.
போட்டோ செய்தி