ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. இவரது கணவர் மாதவன். இவர்களுக்கு வெகுநாட்களுக்கு பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்ட ஜெ. தீபாவிடம், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடு ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இப்போது அந்த வீட்டில் தீபா வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது குழந்தைக்கு பெயர் சூட்டுவிழா நடத்த தீபா ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக பத்திரிகை அடித்து,- தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து வருகிறார். அந்த வகையில் தீபா அவரது கணவர் மாதவன் ஆகியோர் ஓ. பன்னீர்செல்வம் இல்லத்திற்கு சென்று மகள் பெயர் சூட்டு விழாவுக்கு வரும்படி பத்திரிகை வைத்து அழைத்தார். ஓபிஎஸ்சும் வருவதாக கூறினார். அப்போது வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.பின்னர் அங்கிருந்து தீபா புறப்பட்டு சென்றார்.