Skip to content
Home » மாமுல் கேட்டு ……..பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேருக்கு வலை

மாமுல் கேட்டு ……..பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேருக்கு வலை

  • by Senthil

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வெள்ளப்பட்டியில்  பெட்ரோல் பங்க் உள்ளது.நச்சலூரைச் சேர்ந்த கண்ணன் என்பவர் நடத்தி வரும் இந்த பெட்ரோல் பங்கில் இன்பரசு என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று இரவு அதே ஊரைச் சேர்ந்த சின்னச்சாமி மற்றும் மூன்று இளைஞர்கள் பங்கிற்கு வந்து அவரிடம் தீபாவளி போனஸ்  கேட்டு மிரட்டி  தகராறு செய்துதனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சின்னச்சாமி மற்றும் அவரோடு வந்த மூன்று பேர் பங்க் ஊழியரான இன்பரசை கீழே தள்ளி காலால் மீதித்து சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த அவர் தோகைமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பங்க் ஊழியரை சின்னசாமி மற்றும் மூன்று பேர் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளரான கண்ணன் தோகைமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை  நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!