. தேனி மாவட்டம்சின்னமனூர் அ.தி.மு.க.நகர செயலாளர் பிச்சைக்கனி வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக இன்று காலை வரை யாரும் கைது செய்யப்படவில்லை.