Skip to content
Home » திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

திருச்சி அருகே மளிகை கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு….3 பேர் கைது

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டியை சேர்ந்தவர்  முருகானந்தம். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடை முன் நேற்று இரவு  2 பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.   அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வெடித்து குபீரென தீப்பிடித்தது. அந்த  தீ கடைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த உப்பு மூட்டையில்  பட்டு அந்த மூட்டை தீப்பற்றியது. பெட்ரோல் குண்டு சத்தம் மற்றும் தீப்பிடித்ததை பார்த்து  அந்த பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர். அப்போது 3 பேர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து முருகானந்தம்  தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 பேரை பிடித்து வந்து விசாரித்து வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா, அல்லது காதல் விரகாரமாக என பல கோணங்களில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட கட்டிடம் அந்த பகுதியை சேர்ந்த மதிமுக பிரமுகர் ஞானசேகரன் என்பவருக்கு சொந்தமானது. அதில்   முருகானந்தம்  வாடகைக்கு  மளிகை கடை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!