திருச்சியை சேர்ந்த, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிர்வாகியும், பெட்ரோல் பங்க் உரிமையாளருமான பாச.ராஜேந்திரன் காலமானார். நேற்று மாலை உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திருச்சி கேஎம்சியில் சேர்க்கப்பட்ட ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு காலமானார். ராஜேந்திரன் உடல் திருச்சி கேகேநகரில் உள்ள கோவர்தன கார்டனில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன.. மறைந்த பாச.ராஜேந்திரன் அனைத்து தரப்பினருடனும் அன்பாக பழகக்கூடியவர். அவரது மறைவிற்கு etamilnews.com ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது..