கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கருப்பாயி கோவில் தெருவில் வசிப்பவர் நாராயண சாமி. இவரது 5 வயது மகள் பிறந்ததிலிருந்து தலை நிற்காமல், நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். அவருக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் வீரவா நல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தயாராக இருப்பதாகவும், அதற்கு செலவாகும் தொகை தன்னால் செலவு செய்யும்
அளவிற்கு போதிய நிதி வசதி இல்லாததன் காரணமாக தனது அரசு மருத்துவ நிதி உதவி அளிக்க வேண்டும் எனக் கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் சம்யுக்தா என்ற 5 வயது சிறுமியின் பெற்றோர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலிடம் மனு அளித்தனர். தன்னுடைய மகளுக்கு அரசோ அல்லது தனிநபர்களோ உதவி அளிக்கும்படி கோரிக்கை வைத்தார்.