தஞ்சை மாவட்டம், கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் வக்கீல் ரமேஷ் ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் தாலுகா தண்டத்தோட்டம் அரசலாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. இதே ஆற்றங்கரையோரத்தில் செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. செங்கல்சூளைகள் நடத்தி வருபவர்கள் ஆற்றின் கரையில் மணலை அதிகம் அள்ளுகின்றனர். இதனால் மழைக்காலங்களில் ஆற்றின் கரை உடைப்பு ஏற்பட்டு கிராமத்திற்குள் தண்ணீர் புகும் நிலை உள்ளது. எனவே ஆற்றின் கரையில் மண் அள்ளுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆற்றில் மண் அள்ளுவதை தடுக்கக்கோரி… தஞ்சை கலெக்டரிடம் மனு…
- by Authour
