இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 5 போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்தியா முதலில் பேட்டிங் செய்து 150 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 104 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது.
பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 487 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. சிறிது நேரத்திலேயே 3 விக்கெட்டை பறிகொடுத்தது. அத்துடன் 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர். 238 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தனர். இதனால் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் இந்தியா பெற்ற அபார வெற்றி இது. இதற்க முன் இத்தனை ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அங்கு வெற்றி பெற்றதில்லை.
2 இன்னிங்சிலும் சேர்த்து 8 விக்கெட் வீழ்த்திய கேப்டன் பும்ரா பிளேயர் ஆப்த மேட்ச் ஆக தேர்வு செய்யப்பட்டார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 161 ரன்களும், கோலி 100 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.