தமிழ்நாடுஅரசு முன்னாள் அரசுகொறடா, ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் திமுக செயலாளர் பெரியண்ணனின் 28வதுநினைவுதினத்தை யொட்டி
அவரது சொந்த ஊரான மேலைக் கோட்டையில்
உள்ள அவரது இல்லம் அருகில் உள்ள நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர் கள் எஸ்.ரகுபதி,சிவ.வீ.மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா,
வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர்அரு. வீரமணி , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியண்ணன்அரசு, இரா.சு. கவிதைப்பித்தன்,
மாநகர செயலாளர் ஆ.செந்தில், வடக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர்
பெ.ராஜேஸ்வரி, மற்றும் ஏராளமான
திமுக வினர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்
பின்னர் அங்கு ரத்த தானமுகாம்
நடைபெற்றது.
புதுக்கோட்டையில் மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில்
பெரியண்ணன் படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது
அதற்கு அமைச்சர் கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் கள்.
பின்னர் கீழ இரண்டாம் வீதியில்
பெரியண்ணன் நினைவாக மாநகர திமுக சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மாவட்ட திமுக செயலாளர்
பெரியண்ணன் அரசு,பெரி மனோகரன்,பெரி.பன்னீர்செல்வம்,பெரி.மணிமேகலை,பெரி. சாவித்திரி ,பெரி.தமிழ்மணி ஆகியோர்
பங்கேற்றார்கள்.