Skip to content

பேராவூரணி அருகே மீனவர் வலையில் சிக்கிய கடல் பசு….

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வனச்சரகம், பேராவூரணி அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில், மீனவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் மீன் பிடித்து கரைக்கு திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் அரியவகை கடல் வாழ் உயிரினமான சுமார் 7 அடி நீளமுள்ள கடல் பசு சிக்கியிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மீனவர் பிரபாகரன் மற்றும் அவரைச் சார்ந்த 14 மீனவர்கள் வலையை அறுத்து, கடல் பசுவை நல்ல நிலையில் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த பட்டுக்கோட்டை வனச்சராக அலுவலர் ஏ.ஆர்.சந்திரசேகரன், மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி, விரைவில் விழா நடத்தி, மீனவர்களைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கப்படும். வனத்துறை, மீன்வளத்துறை, சமூக அமைப்புகள் இணைந்து, மீனவ மக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதன் எதிரொலியாக, இதுவரை மீனவர்கள் வலையில் உயிருடன் சிக்கிய ஏராளமான கடல் பசுக்கள், அரியவகை கடல் ஆமைகள் மீண்டும் உயிருடன் கடலுக்குள் விடப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

error: Content is protected !!