திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான மகேஷின் வழிகாட்டுதலின் பேரில் மாவட்ட கழக அவைதலைவர் கோவிந்தராஜன் தலைமையிலும் மாநகர கழக செயலாளர் மதிவாணன் முன்னிலையிலும் அவரது திருஉருவ பட படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட அலுவலகத்தில் உள்ள கொடிமரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரு வர்ண கொடியை கழக முன்னேடி வன்ணைஅரங்கநாதன் அவர்கள் ஏற்றினார். இந்நிகழ்வில்தலைமை செயற்குழு உறுப்பினர் சபியுல்லா மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன் மூக்கன் லீலாவேலு பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட பகுதி ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் அனைத்து சேர்மன்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்