Skip to content
Home » பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் புதியபேருந்து நிலையத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உழவர்பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் 38 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலைஅணிவித்தும் மலர்தூவியும் நினைவஞ்சலி செலுத்தினர்.பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால் மக்காச்சோளம், பருத்தி மற்றும் வெங்காயம் போன்ற பயிர்கள் வளர்ச்சி குன்றி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக முறையாக கணக்கீடு செய்து அரசு நிவாரணம் வழங்கிடவும், பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க ஆவன செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் ஐந்து பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்ய அரசு ஆணை பிறப்பித்தபடி விதிமுறைப்படி பெரம்பலூர் மாவட்டத்தில் தகுதியானவர்கள் தேர்வு செய்த பட்டியல் சென்னையிலுள்ள கூட்டுறவு பதிவுத்துறை அதிகாரிக்கு அனுப்பியும் உத்திரவு வழங்காததினால் தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் உள்ள பயனாளிகளுக்கு இதுவரை நகை திருப்பி வழங்கப்படவில்லை என்றும் உடனடியாக நகையை திருப்பி வழங்கிட ஆவன செய்திட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றும்விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.அதே போல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு ஆணையில் உள்ளபடி முறையாக நடத்துமாறும் விவசாயிகளின் மனுக்களை பதிவு செய்து வாங்கவேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பபட்டன.இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *