தமிழ்நாடு அரசின் சார்பாக (Khelo India Youth Games) வரும் 19.01.2024 முதல் 31.01.2024 வரை 26 விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒரு மாதிரி விளையாட்டுப்போட்டி (சிலம்பம்) தமிழ்நாட்டில் உள்ள 4 மாவட்டங்களில் நடக்கிறது .
கெலோ இந்தியா போட்டிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் இன்று (12.1.2024) பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் விழிப்புணர்வு ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது. இந்நிகழ்வினை மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் மா பிரபாகரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
5 கி.மீ.தொலைவிற்கு நடத்தப்பட்ட இந்த போட்டியில் 25 வயதிற்க்குட்பட்ட பள்ளி, கல்லலூரிகளைச்சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழிப்புணர்வு ஓட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து துவங்கி பாலக்கரை வளைவு வரை சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.
இந்த விழிப்புணர்வு ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 15.01.2024 அன்றுநடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது .இந்நிகழ்வின்போது மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பா.சிவா மற்றும் பலர் உடனிருந்தனர்.