பெரம்பலூர் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமம் சேர்ந்தவர் அண்ணாதுரை இவருக்கு இரண்டு அருள்குமார் மற்றும் அன்பழகன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். அண்ணாதுரை அவரது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர்.
நேற்றிரவு அண்ணாதுரை வளர்க்கும் நாய் அவரது வீட்டின் அருகே உள்ள வசந்தா என்பவரின் வீட்டு வாசலிற்கு சென்ற போது இரு குடும்பத்தினருக்கும் தாராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணாதுரைக்கும் வசந்தாவிற்கும் குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில தகராறு நேற்றிரவு ஓய்ந்த நிலையில் இப்பிரச்சினை இன்று மதியம் மீண்டும் தொடர்ந்துள்ளது.
வசந்தாவின் மகன் ரமேஷ் சென்னையிலிருந்து இன்று மதியம் அம்மாபாளையம் வந்துள்ளார். அண்ணாதுரையின் மகனான அன்பழகனை ரமேஷ் மற்றும் அவரது உறவினர் இருவர் சேர்ந்து
அன்பழகனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு 7 மணியளவில் இரவு உணவு வாங்குவதற்காக அம்மாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஹோட்டலிற்கு அன்பழகன் வந்த போது அங்கு ரமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்னையை சேர்ந்த ரவி மற்றும் தேவர் ஆகிய மூவரும் காரில் வந்து அன்பழகனுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ரமேஷ் கையில் அணிந்திருந்த இரும்பு காப்பை கொண்டு அன்பழகனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பித்து சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அன்பழகனை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் அன்பழகனின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிய நபர்களை கைது செய்ய கோரி அவரது உறவினர்கள் ரமேஷ் வந்த காரை அடித்து நொறுக்கிவிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரம்பலூர் துறையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய் பக்கத்து வீட்டுக்கு சென்றதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கழுத்து அறுத்து காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது.