பெரம்பலூர் அரியலூர் சாலையில் அருமடல் பிரிவு ரோடு அருகே கவுல் பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் புதிதாக தொடங்க உள்ள காய்கறி கடையில் இன்று காலை இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில் இறந்த கிடந்த வாலிபர் இதே பகுதியை சேர்ந்த சுபாஷ் (23) எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று காலை வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் இன்று காலை ரத்த
வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இளைஞர் இறந்து கிடந்த இடத்தில் மது பாட்டில்கள் கிடந்ததால் மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் தீவிரமாக விசாரணை கொண்டு வருகின்றனர்.