பெரம்பலூரை அடுத்த குரும்பலூரைச் சேர்ந்த மதிவாணன் என்ற இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தில் குரும்பலூரிலிருத்து ஈச்சம்பட்டி நோக்கி சென்றுள்ளார். அப்போது ஈச்சம்பட்டி அருகே சின்னாங்குளம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முற்பட்டதாக கூறப்படுகிறது அப்போது துறையூரிலிருந்து விழுப்புரம் செல்வதற்காக பெரம்பலூர் நோக்கி எதிர் திசையில் வந்த வேன் மீது மோதியதில் மதிவாணன் கழுத்து , தலையில் ஏற்பட்ட காயத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் இறந்த மதிவாணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. இந்த விபத்து தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் வேன் ஓட்டுநர் ரமேஷ் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற சில நிமிடத்தில் மதிவாணன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குரும்பலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.