தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பாக பெரம்பலூர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டில் வாழ்பவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று உறுதியளிக்கும் தினம் தேசிய வாக்காளர் தினம். செல்வந்தர்கள் மட்டுமே செல்வாக்கு பெற்று இருந்த காலம் மாறி இந்திய குடிமகனாகிய அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்டிய தினத்தை நினைவு கூறும் தினம் ஆகும். வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. வாக்களிப்பது நமது கடமை .ஆள்பவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை வாழ்பவர்களுக்கும் உண்டு. வாருங்கள் உறுதி ஏற்போம் என்று தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 1000 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் உறுதி எடுத்து கொண்டனர். ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம் இனம் வகுப்பு மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றயும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம் என்று மாணவர்கள் உறுதி ஏற்று கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாணவர்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மனித வடிவில் வாக்காளர் தின சின்னதை உருவாக்கினர். இந்த சின்னமானது அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற
எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் விதைத்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் நா.வெற்றிவேலன் செய்து இருந்தார். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி கலந்து கொண்டு தேசிய வாக்காளர் தின உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைகழக வேந்தர் சீனிவாசன் முன்னிலைவகித்தார்.