பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கரிகாலன் 45 ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சோலைராஜா என்ற சோசியக்காரர் நானும் வருகிறேன் என்னை பெரம்பலூரில் இறக்கி விடுங்கள் என்று லிப்ட் கேட்டு இருவரும் பெரம்பலூரை நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஆலம்பாடியை நோக்கி பெரம்பலூரில் இருந்து வந்த மினி பேருந்து வந்த பொது பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி சம்பவ இடத்திலேயே இருசக்கர வாகனத்தில் வந்த கரிகாலன் சோலைராஜா என்ற
இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அக்கம் பக்கத்தினர் தெரிவித்து உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மினி பேருந்து அடித்து நொறுக்கினர். பிரேதத்தை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மினி பேருந்து ஓட்டுநர் பிரேம்குமார் என்பவரை விசாரித்து வருகின்றனர்.