நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ரோடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வரதராஜன் ரோந்து பணியில் இருக்கும் போது நான்கு ரோடு to மூன்று ரோடு செல்லும் சாலையில் பணப்பை (Purse) ஒன்று கிடப்பதை கண்டார் பின்னர் அப்பணப்பையை எடுத்து அதில் உள்ள முகவரியை வைத்து விசாரித்ததில் அவர் பெரம்பலூர் மாவட்டம் அரசலூர் கிராமத்தைச் சேர்ந்த இளமுருகன் மகன் கிஷோர்குமார் என்பது தெரியவர அவருக்கு தகவல் அளித்து வரவழைத்து அவரிடம் அவரது அடையாள அட்டை, ஆதார் அட்டை, பான்கார்டு மற்றும் ரூபாய்.2,050 பணம் ஆகியவை அடங்கிய பணப்பையை (Purse) பத்திரமாக ஒப்படைத்தார். காவல் ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக காவலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் தவறவிட்ட பர்சை உரிமையாளரிடம் ஒப்படைத்த டிராபிக் போலீஸ்…
- by Authour
