பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் ராஜா திரையரங்கம் உள்ளது. தற்போடு விஜய் நடித்த திரைப்படம் லியோ ஓடிகொண்டு உள்ளது அதனை காணவந்த பெரம்பலூர் மாவட்டம் பேரளி கிராமத்தை சார்ந்த கண்ணதாசன் மகன் மணிகண்டன் என்பர் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார்.ராஜா திரையரங்கில் விஜய் நடித்துள்ள லியோ என்னும் திரைப்பத்தினை 24.10.2023 அன்று காலை 9.10 மணி காட்சியினை தனது மகன் மற்றும் நண்பர்களுடன் காண 24.10.2023 காலை அன்று தங்கள் திரையரங்கின் டிக்கெட் கவுண்டரில் 6 டிக்கெட் பெற்றுள்ளார்.மேற்படி 6 டிக்கெட்டுகளுக்கும் டிக்கெட் விலை ரூ.130/- என 6 டிக்கெட்டிற்கு ரூ.780/- என இருந்தபொழுதிலும், ஒரு டிக்கெட் விலை ரூ.200/- என 6 டிக்கெட்டுகளுக்கும் சேர்த்து ரூ.1200/- தொகையினை அரசின் விதிமுறைகளை மீறி நியாயமில்லா கொள்ளை லாபம் பெறும் நோக்கத்தோடு பெற்றுள்ளீர்கள்.வேறு வழியின்றி அந்த தொகையினை தனது Phone Pay கணக்கிலிருந்து தங்கள் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். உடன் வந்த 4 நபர்களை உடன் அனுப்பிவைத்துவிட்டு தனது மகனை வீட்டிற்கு சென்று
அழைத்துக்கொண்டு 30 நிமிடம் தாமதமாக திரைப்படத்தை காணவந்தார். ஒரு மக்கள் பிரதிநிதி ஆவார். தாங்கள் அதிக விலைக்கு வற்புறுத்தி விற்ற டிக்கெட்டையும் பணம் செலுத்தி வாங்கியுள்ளார். மேலும் 4 நபர்களை
திரையரங்கின் உள்ளே அனுப்பிவிட்டு தனது மகனை அழைத்து வந்த தாமததித்தினால்30 நிமிடம் தாமதமாகதிரைப்படத்தினை காண வந்தார் ஆனால் திரையரங்கின் பணியாளர்கள், 30 நிமிடம் தாமதமாக வந்ததினால், திரைப்படத்தினை காண அனுமதிக்க முடியாது என உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.தனது மகனை அழைத்து வந்ததனால் கால தாமதமாகி விட்டதாகவும், உள்ளே அனுமதிக்குமாறும் திரையரங்க ஊழியர்களிடம் கேட்டும் திரையரங்க ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
ரூ.130/- டிக்கெட்டை ரூ.200/- பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய என்னை திரைப்படத்தினை காண அனுமதிக்காமல் இருப்பது என்ன நியாயம், இது குறித்து நான் புகார் செய்வேன் ? எனக் கேட்டதற்கு, அப்படியென்றால் நீ இந்த டிக்கெட்டை கொடுத்துவிட்டு அடுத்த காட்சிக்கான டிக்கெட்டை வாங்கிக்கொள்” எனக் கூறி எனது கட்சிக்காரரிடம் உள்ள டிக்கெட்டை வாங்கி திரையரங்க ஊழியர்கள் பெற்றுள்ளனர். யாறும் எதிர்பாராத வகையில், திரையரங்க ஊழியர்கள் அந்த டிக்கெட்டை கிழிதெறிந்துவிட்டு, இப்பொழுது உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் இனிமேலும் இங்கு நீ நின்று கொண்டிருந்தால் உன்னை நாங்கள் வெளியே
தள்ளி விடுவோம் என மிகவும் தரக்குறைவாகவும், அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசி உள்ளனர். தனது மகன் முன்னிலையில் டிக்கெட் இருந்தும் படம் பார்க்க முடியாமல் போனதாலும், தங்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். வேறு வழியின்றி படம் பார்க்காமல் திரும்பி வந்தார். பாதிக்கபட்டவர் தெரிவிக்கையில் பொதுமக்களிடம் ரூ.130/- மதிப்புள்ள டிக்கெட் ஒன்றினை ரூ.70/- கூடுதல் வைத்து விற்று கொள்ளை இலாபமாக மட்டும் ஒரு காட்சிக்கு 527 (ஐநூற்றி இருபத்தேழு இருக்கைக்கு ரூ.36,890/- (ரூபாய் முப்பத்தாறாயிரத்து என்னூற்றி தொன்னூறு மட்டும்) என்று நாள் ஒன்றுக்கு ரூ.1,84,450/- (ரூபாய் ஒரு லட்சத்து என்பத்து நான்காயிரத்து நானூற்றி ஐம்பது மட்டும்) டிக்கெட் விலையினை மீறி முறைகேடாக பெறுகிறீர்கள் என்று கூறுகிறார்.
மேலும் அவர்கள் தேவையைப் பயன்படுத்த நிர்வாகம் கூறிய கட்டணம் செலுத்தியும் திரைப்படத்தை காண விடாமல் நிர்வாகம் தடுத்து நிறுத்தியதும், அனைவரின் முன்னிலையில் அவதூறாகவும், மிரட்டும் தொனியிலும் பேசியதும் எனது நற்பெயருக்கும், மதிப்பிற்கும் களங்கம் விளைவித்ததும் உங்களது சேவைக் குறைபாடு மற்றும் அவதூறு ஆகும். அதனால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் ஆகியவற்றிற்காக இழப்பீடாக ரூ.1,00,000/ (ரூபாய் ஒரு லட்சம் மட்டும்) -ம். வசூல் செய்த இரண்டு டிக்கெட் விலை ரூ.400/- மற்றும் 4 டிக்கெட்களுக்கான அதிக விலை ரூ.280/- சேர்த்து ரூ.1,00,680/- (ரூபாய் ஒரு லட்சத்து அறுநூற்றி என்பது மட்டும்) வழங்கவேண்டி. உரிமையியல் மற்றும் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர போவதாக கூறினார் பெரம்பலூரில் திரையரங்கில் நடந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.