பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில், தூய்மை பணியாளர்களுக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. தொற்றா நோய் பரிசோதனைகள், ரத்த அழுத்தம் ரத்த பரிசோதனை இருதய பரிசோதனை, பல் பரிசோதனை, சளி பரிசோதனைகள், கண் பரிசோதனைகளை, சர்க்கரை , பரிசோதனைகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.
பிசியோதெரபி, யோகா பயிற்சிகள் மற்றும் இயற்கை மருத்துவம், நோய்களுக்கு உரிய ஆங்கில மருந்துகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் என்.ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், நகராட்சி ஆணையர் ராமர், நகராட்சி கவுன்சிலர் துரை.காமராஜ், டாக்டர் அரவிந்தன், உள்ளிட்ட சுகாதார துறையினர், பலர் கலந்து கொண்டனர்.
