பெரம்பலூர் மாவட்டம், அரனாரை கிராமத்தைச் சேர்ந்த பத்மஜா- அசோக்குமார் தம்பதியரின் மகள் ஜெய் ஜியோட்ஷ்னா, சென்னை வேலம்மாள் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் முகாமில் சைக்கிள் போட்டிக்கு பயிற்சி பெற்றார். அசாம் மாநிலம் , கவுகாத்தியில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் ஜெய் ஜியோட்ஷ்னா,வெண்கலப்பதக்கம் பெற்றார்.
அவரை மேலும் ஊக்குவிக்கும் வகையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.16 லட்சம் மதிப்பிலான நீண்ட தூரம் வேகமாக செல்லும் சைக்கிளை வழங்கினார். அந்த சைக்கிளை பெரம்பலூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா.எம்.பி., யிடம் ஜெய் ஜியோட்ஷ்னா, காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அவரது பெற்றோர் மற்றும் மாவட்ட திமுக செயலாளர் குன்னம் சி. ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.