பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று கார்த்திகை மாத மூன்றாம் வார சோமவார சங்காபிஷேகம் நடைபெற்றது . காலை 9:30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை முடித்து சங்குகளுக்கு புனித நீர் நிரப்பி வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் முடித்து கடன்கள் புறப்பாடு செய்து பகல் 12:00 மணி அளவில் ஈசன் மற்றும் அம்பாளுக்கு பால் தயிர், சந்தனம், பழங்கள், இளநீர் வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் கைகளினால் எடுத்துச் செல்லப்பட்ட 108 சங்குங்களையும் சிவனுக்கு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது . விழாவில் செயல் அலுவலர் கோவிந்தராஜ் முன்னாள் அறங்காவலர் தெ.பெ.வைத்தீஸ்வரன் ப.மகேஸ்வரன், .சத்தியராம் குமார், ராஜமாணிக்கம் மற்றும் திரளான சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை கௌரி சங்கர் மற்றும் முல்லை சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர்.