சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தி.மு.க.கூட்டணி கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் – தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் பானை சின்னத்திற்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தலைமையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கிழக்கு ஒன்றியம், காரை கிராமத்தில் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.
