இந்தியாவிலேயே முதன்முறையாக நமது தமிழ்நாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தொடங்கிவைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் தகவல்
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் இன்று (25.08.2023) இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பெரம்பலுார் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட லப்பைகுடிகாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் முதலமைச்சரின்
காலை உணவுத்திட்டத்தை இன்று மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்களும், மாவட்ட கலெக்டர் க.கற்பகம், அவர்களும் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து கண்டுகளித்தனர். பின்னர், மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு பரிமாறப்பட்டது, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார்.