பெரம்பலூர் மாவட்டம், கவுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல். அவரது நண்பர் நிதீஷ் என்ற சிறுவர்கள் தந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு திரும்ப வீட்டிற்கு வரும் பொழுது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நெடுவாசல் பிரிவு சாலையில் கடக்க முயன்ற பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரண்டு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . தகவல் அறிந்த பெரம்பலூர் காவல் துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனை வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி விடுமுறையில் பள்ளி மாணவர்கள் பலியான சம்பவம் மாவட்டம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.