நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தற்போது தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்பட 25 மாநகராட்சிகள் உள்ளன. பெரம்பலூர், ராமநாதபுரத்தையும் சேர்த்தால் 27 மாநகராட்சிகளாக உயரும் .
இவ்வாறு அமைச்சர் கே. என். நேரு கூறினார்.