பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, பெரம்பலூர் நகரில் வசிக்கும் பொதுமக்களின் விடுமுறை நாளான ஞாயிறு கிழமையை பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று 04.06.2023-ம் தேதி பெரம்பலூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான வெங்கடேசபுரத்தில் *மகிழ்ச்சியான ஞாயிறு, மகிழ்ச்சியான தெரு* என்ற நிகழ்ச்சி
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் நேரத்தை பயனுள்ளதானதாக மாற்றும்
வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான தப்பாட்டம், சிலம்பாட்டம், மான்கொம்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், காவல்துறையின் வாத்திய குழு மூலம் இன்னிசை நிகழ்ச்சியும், ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகளின் மூலமாக மதுவினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் போதை பழக்கங்களில் அடிமையாகுவதை தவிர்க்குமாறு விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் சாலை விதிகளை பின்பற்றுவது குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக நடனம் ஆடினார்கள். பெரு நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த மகிழ்ச்சியான தெரு என்ற நிகழ்ச்சிகள் இன்று பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி பொதுமக்களுக்கும் காவல்துறைக்குமிடையே நல்லுறவை வளர்க்க வேண்டும் என்று எடுக்கபட்ட்ட முயற்சியினாலும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிகழ்ச்சி பொது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது.
மேற்படி நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் மதியழகன் (தலைமையிடம்) வேல்மணி (மது விலக்கு அமலாக்க பிரிவு) பழனிச்சாமி (பெரம்பலூர் உட்கோட்டம்) சீராளன் (மங்களமேடு உட்கோட்டம்) மற்றும் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.