போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.11.58 கோடி மதிப்பீட்டில் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் தலைமையில் இன்று (01.12.2023) பல்வேறு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள்
நலன் கருதியும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களை பொதுமக்கள் முறையாக, முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வுகளில் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ந.கிருஷ்ணமூரத்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, ஆலத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.