பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நாரணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட, மருதடி கிராமத்திற்கு, பெரம்பலூரில் இருந்து செட்டிக்குளம் செல்லும் அரசுப் பேருந்தை, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பேருந்து சேவை நீட்டிப்பை எம்எல்ஏ எம்.பிரபாகரன் – ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள். எம்எல்ஏ எம்.பிரபாகரன், அரசுப் பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் செய்தார். இந்த
நிகழ்ச்சியில், அரசுப் போக்குவரத்துக் கிளை மேலாளர் ராஜா, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன்,தொ.மு.ச.மாவட்டகவுண்சில் பேரவை தலைவர் கே.கே.எம்.குமார், மாவட்ட பொருளாளர் சங்கர், நாரணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் பத்மாவதி சந்திரன், மற்றும் ஞானசுந்தரம் , விஜயகுமார், சீனிவாசன் உள்ளனர்.