பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது மனைவியை கடந்த 22ம் தேதி இரவு 10 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தன் மனைவி பிரவீணாவைக் கொலை செய்து விட்டு தன்னை அக்கும்பல் தாக்கியதாகவும் போலீசாரிடம் கூறினார். போலீசார் அவரை மருத்துவ மனையில் அனுமதித்து விட்டு விசாரணையை தொடங்கினர்.
மர்ம நபர்கள் மனைவியை தாக்கும்போது, கணவன் எதிர்த்து போரிடாமல் ஏன் தப்பி வந்தார் என்ற கோணத்தில் அவரிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். எனவே போலீசாருக்கு ராஜ்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரிடம் போலீசார் உரிய முறையில் விசாரணையை தொடங்கியபோது, தனது கள்ளக்காதல் விவகாரத்தை கண்டித்ததால், மனைவியை கூலிப்படையை ஏவி தீர்த்துகட்டியதை ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக அவர் போலீசில் அளித்த வாக்குமூலம்:
மனைவி பிரவீணா எனது மாமா மகள். அவரை 2017ம் ஆண்டு திருமணம் செய்தேன். எங்களுக்கு சர்வேஸ்வரன்(5) யோகித் (2) ஆகிய மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் எனக்கும், பெரம்பலூர் அருகே உள்ள திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த எனது சுகன்யா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவர் திருமணமானவர், அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
கள்ளக்காதல் முற்றிய நிலையில் கடந்த மே மாதம் ரா நானும், சுகன்யாவும் வீட்டை விட்டு ஓடி சென்னையில் தங்கி இருந்தோம்.இதனால் பிரவீணா என்னை காணவில்லை என்று கூறி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சென்னையில் இருந்த எங்களை பிடித்து வந்து இருவரையும் அவரவர் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஆனாலும் நாங்கள் அடிக்கடி சந்தித்து கொள்வோம். இதனால் என் மனைவி பிரவீணா என்னுடன் தகராறு செய்து வந்தார். ஒரு முறை தகராறு முற்றிய நிலையில் என்னை செருப்பால் அடித்து விட்டார்.
எனவே இனி பிரவீணா உயிரோடு இருக்கும் வரை , நாம் கள்ளக்காதலியுடன் உல்லாசமாக வாழ முடியாது. மனைவியை தீர்த்து கட்ட வேண்டியது என தீர்மானித்தேன்.
இது ஒருபுறம் இருக்க , எனது சொந்த அண்ணன் செந்தில் குமார் மனைவி ஆனந்தியுடனும் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. அண்ணன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட்டதால் நான் அண்ணியுடன் தொடர்பில் இருந்தேன்.
இந்த நிலையில் தான் பிரவீணாவை எனக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனர். ஆனாலும் அண்ணியுடனும், சுகன்யாவுடனும் நான் தொடர்பை விடவில்லை. இந்த விவகாரம் வெளிநாட்டில் உள்ள அண்ணனுக்கு தெரியவந்ததால் அவரும் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து விட்டார். அதன் பிறகும் நான் அவ்வப்போது அண்ணியுடன் ஜாலியாக இருந்தேன்.
இந்த விஷயம் மனைவி பிரவீணாவுக்கு தெரிய வரவே அண்ணி ஆனந்தியை பலமுறை கண்டித்தார்.
ஆனால் அதைக் கேட்காமல் மீண்டும் கள்ளஉறவில் இருந்த ஆனந்தியை துடைப்பதால் பிரவீணா அடித்து அவமானப்படுத்திவிட்டார். எனவே பிரவீணாவை கொலை செய்ய வேண்டும் என அண்ணியும் திட்டம் வைத்திருந்தார்.
இதனால் நானும், அண்ணியும் சேர்ந்து பிரவீணாவை ஒழித்துக்கட்ட திட்டம் போட்டோம். ஆனந்தியும் இதற்க உடன்பட்டார்.
ஆனந்தியின் அக்கா மகன் திருப்பத்தூரை சேர்ந்த தீபக் ஏற்கனவே கொலை வழக்கில் ஈடுபட்டவன் என்பதால் அவன் மூலம் திட்டம் தீட்டி அதற்கு 2 லட்சம் ரூபாய் பேரம் பேசினோம். இதற்காக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் லோன் வாங்கி, அதில் முதல் தவணையாக ரூ.50 ஆயிரத்தை ஆனந்தியின்’ ஜி பே’ வுக்கு அனுப்பி வைத்தேன். அதை ஆனந்தி அக்கா மகன் தீபக்குக்கு அனுப்பினார்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட தீபக் தனது நண்பர்களான திருப்பத்தூரை சேர்ந்த சந்தோஷ் பாபு (எ) சஞ்சய் (19) ,சரண்குமார் (19), லக்கி லட்சன் (19), பப்லு (22) ஆகியோருடன் கடந்த 22 ம் தேதி பெரம்பலூர் வந்தான்.
ஏற்கனவே திட்டம் தீட்டியது போலவே ராஜ்குமார் நைட் ஷிப்ட் வேலைக்கு செல்வது போல் நாடகமாடினார். பள்ளி விடுமுறை என்பதால் ஏற்கனவே 2 மகன்களையும் ராஜ்குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி விட்டான். நான் நைட் ஷிப்ட் வேலைக்கு செல்கிறேன். உன்னையும் உறவினர் வீட்டில் விட்டு விட்டு செல்கிடிறேன்.
வண்டியில் ஏறு என இருசக்கர வாகனத்தில் ஏறு என மனைவியை அழைத்துகொண்டு இரவில் வந்தேன். ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் வந்தபோது, சோளக்காட்டில் மறைந்திருந்த தீபக் கும்பல் ஆயுதங்களோடு வந்து டூவீலரை மறித்தனர். கொள்ளைக்காரர்கள் என பயந்து போன பிரவீணா, எங்களை விட்டு விடுங்கள் கழுத்தில் போட்டு இருக்கிற நகைகளை கழற்றி தருகிறேன் என கெஞ்சினார்.
தீபக் மற்றும் அவனது நண்பன் சந்தோஷ் பாபு சரமாரியாக பிரவீணாவின் கழுத்தில் வெட்டிக்கொன்றனர். என்னையும் தாக்குவது போல 2 பேர் பிடித்துக்கொண்டு லேசான காயம் ஏற்படுத்தினர். மனைவி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்துகொண்டு நான், நேராக போலீஸ் நிலையம் சென்று என்னை மனைவியை கொள்ளைக்காரர்கள் தாக்குகிறார்கள், என்னையும் வெட்டினர். நான் தப்பி வந்து விட்டேன் என கூறினேன்.
இதற்கிடையே கொள்ளைக்காக இந்த கொலை நடந்தது போல நாடகமாட நினைத்து பிரவீணா கழுத்தில் கிநட்த ஒரு பவுன் செயின் மற்றும் கால் கொலுசை கழற்றிக்கொண்டு தீபக் கும்பல் தப்பிச்சென்றது. போலீசார் என்னிடம் துருவி துருவி விசாரித்தபோது நான் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறி விட்டேன்.
அதைத்தொடர்ந்து என்னையும், அண்ணி ஆனந்தி, மற்றும் தீபக், சந்தோஷ் பாபு (எ) சஞ்சய் (19) ,சரண்குமார் (19), லக்கி லட்சன் (19), பப்லு (22) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர்.
இவ்வாறு அவர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். இதைத்தொடர்ந்து 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.