பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராஜகுமாரசுவாமிகள் மணிமண்டபம் கும்பாபிஷேகம் மற்றும் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அதற்கான சிறப்பு பூஜைகள் காலை முதல் நடைபெற்றது. இதில் சூரியனார் கோவில் ஆதீனம் சிவாகர தேசிக சுவாமிகள் தலைமையில், புனித நீர் கொண்டுவரப்பட்டு கலசத்துக்கு ஊற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் கலந்து கொண்டனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் வஸ்திரதானம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரோகிணி மாதாஜி,தவசி யோகி சுவாமிகள், சுந்தர மகாலிங்கம் சுவாமிகள் ஆகியோர் செய்து இருந்தனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வீல் சேர் வழங்கப்பட்டது.
பெரம்பலூர் அருகே பிரம்மரிஷி மலை அடிவாரத்தில் மணி மண்டப கும்பாபிஷேகம்…
- by Authour
