மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் ஒப்பந்த மற்றும் அவுட்சோர்சிங் முறைகளை கண்டித்தும் , மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க நிரந்தரபடுத்திட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும்ட. உள்ளாட்சி துறையில் அவுட்சோர்சிங் புகுத்த பிறப்பிக்கப்பட்ட அரசு ஆணைகள் 115, 139,152 ஆகியவற்றை ரத்து செய்திட வேண்டும்.
மின்சாரம் ,போக்குவரத்து, அரசு கேபிள் டிவி, அரசு மருத்துவமனை, நகராட்சி, TWAD, ரயில்வே ஆகிய துறைகளில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்திட கோரியும் , முறைசாரா தொழிலாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து பணப்பயன்களையும் நிபந்தனையின்றி வழங்கிட கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய தொழிற்சங்க மையம் CITU சார்பில் பெரம்பலூர் புதிய புதிய பேருந்து நிலையத்தில் இன்று பெருந்திரள் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரெங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யூவின் மாநில துணைத்தலைவர் கருப்பையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விளக்க உரை ஆற்றினார்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சி ஐ டி யூ மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாவட்ட துணை தலைவர் மணிமேகலை, மாவட்ட பொருளாளர் ரெங்கராஜ் , மாவட்ட துணைத்தலைவர் கருணாநிதி மற்றும் சிஐடியுவின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு கோரிகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.