பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வெற்றி வேட்பாளர் கே.என். அருண் நேருவை ஆதரித்து, பெரம்பலூர் நகரப் பகுதிகளில் தொடர்ந்து உதயசூரியன் சின்னத்தில் , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வாக்குகள் சேகரித்து வருகிறார். பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ போட்டுக் கொடுத்து அங்கிருந்தவர்களை டீ குடிக்க வைத்தார். அப்போது அனைவரிடத்திலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களிடையே பெரும் உற்சாகத்தையும் கவனத்தையும் ஈர்த்தது.
பெரம்பலூரில் திமுக வேட்பாளரை ஆதரித்து டீபோட்டு வாக்கு சேகரித்த எம்எல்ஏ..
- by Authour
