பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் வெளி மாநில மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு.
நீங்கள் சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை விட்டு வேலைக்காக எங்கள் தமிழ்நாட்டை நம்பி வந்திருக்கிறீர்கள் உங்களை பாதுகாப்பது எங்கள் காவல் துறையில் உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
யாரோ சில விஷமிகள் தமிழ்நாட்டு மக்கள் மீது பொய் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அதை நீங்கள் ஒருபோதும் நம்பாதீர்கள். உங்கள் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுப்பது எங்கள் காவல் துறையின் கடமையாகும் வீண்
வதந்திகளை நம்பவேண்டாம். எங்கள் மாநில முதலமைச்சர் காவல் துறை இயக்குநர் மற்றும் எங்கள் பெரம்பலூர் மாவட்ட காவல் துறை ஆகியோர் எங்கள் தமிழ்நாட்டை நம்பி வந்த உங்களை பத்திரமாக பார்த்து கொள்வார்கள்.
நீங்கள் எங்கள் தமிழ்நாட்டின் வளத்தை மேம்படுத்த வந்த உழைப்பாளிகள். எனவே நீங்கள் தமிழ்நாட்டில் எந்தவித பயமும் இன்றி உங்கள் வேலையை செய்யலாம்.
நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள் என்பதை whatsapp மூலமாகவோ, போன் மூலமாகவோ உங்கள் குடும்பத்திற்கு தகவல் தெரியபடுத்துங்கள். நீங்கள் பொய்யான வதந்திகளை பரப்பாதீர்கள் அப்படி பரப்புபவர்கள் பற்றிய தகவல் தெரியவந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரியபடுத்தவும்.பொய் தகவல் பரப்பினால் அது சட்டபடி குற்றம்.
உங்களுக்கு எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பிரச்சனை ஏதேனும் ஏற்பட்டால் கீழே கண்ட ஏதேனும் ஒரு அலை பேசிக்கோ Mail ID க்கோ தெரிவிக்கவும் உங்கள் புகார்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தாரரின் விவரம் இரகசியம் (அவசியமெனில்) காக்கப்படும்.
மேலும் தொடர்புக்கு
துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி. 94892-38665
மாவட்ட காவல் அலுவலகம் 94981-00690
காவல் கட்டுப்பாட்டு அறை 94981-81225
பாடாலூர் காவல் நிலையம் 94981-00693
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பெரம்பலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி, பெரம்பலூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முருகேசன், அரும்பாவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணியம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கலா, மாவட்ட குற்ற பதிவேடு கூட காவல் ஆய்வாளர் அழகம்மாள், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதுமதி, பாடாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.