பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் கோபி என்பவர் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்ற போது எதிர்பாராவிதமாக மேலப்புலியூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி வந்த அரசு பேருந்து நடந்து சென்ற வாலிபர் மீது மோதியதில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் கோபி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தை ஓட்டி வந்த ஜார்ஜ் வில்லியம் என்பவர் அங்கிருந்து காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் போலீசார் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் கோபி மதுபோதையில் சாலையை கடக்க முற்பட்டபோது பேருந்து எதிர்பாராத விதமாக மோதியத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்து சக்கரத்தில் மாட்டி தலை நசுங்கி உயிரிழந்ததாக தெரியவருகிறது.நேற்று முன்தினம் இதே போல் குரும்பலூர் அருகே பாளையம் கிராமத்தில் இரு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று மாணவர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து தற்போது கோபியும் உயரிழிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.