பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சாமியப்பா நகரைச் சேர்ந்த ஜெயமணி (67) க/பெ ஜோதிராமலிங்கலம் எளம்பலூர் ரோடு, பெரம்பலூர். என்பவர் கடந்த 22.11.2023 –ம் தேதி சொந்த வேலை காரணமாக துறையூர் சென்றுவிட்டு மீண்டும் பெரம்பலூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தவர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் கைப்பையில் கொண்டுவந்த 09 பவுன் நகை மற்றும் 02 ஜோடி வைர தோடு ஆகியவற்றை காணவில்லை என்று பெரம்பலூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் மேற்படி வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தும் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வுசெய்ததிலும் சோலையம்மா (30) க/பெ மதன், குட்டை கிராமம், செங்கம், திருவண்ணாமலை மாவட்டம். என்பவர் மேற்படி திருட்டில் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில் இன்று 29.01.2024 -ம் தேதி சோலையம்மா என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 3/4 பவுன் எடையுள்ள 4 தங்க வளையல்கள் (3 பவுன்), 3 பவுன் எடையுள்ள 2 தங்க வளையல்கள் (6 பவுன்) என மொத்தம் 09 பவுன் தங்கநகை மற்றும் 2 ஜோடி வைர தோடு ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படியும் பெரம்பலூர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்ப்பாளர் A.பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி மேற்படி எதிரியை பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பார்த்திபன் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.