பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் பால்ராஜ் (49).
இவர் நேற்று முன்தினம் பரவாய் கிராமத்தில் மது அருந்தி விட்டு அதே கிராமத்தை சேர்ந்த பெண் பிறந்ததிலிருந்தே மன நலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு மூன்று தங்கைகள் உள்ளனர். நேற்று காலை அவருடைய அம்மா உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதையறிந்த பால்ராஜ் அந்த மன நலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று திண்பண்டம் வாங்கி கொடுத்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு வெளியில் வரும் போது அந்த பெண்ணின் அம்மா செல்வமணி பார்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து பால்ராஜ் தப்பி சென்றுள்ளார். பின்னர் இரவு மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கை கால்களில் காயம் உள்ளதாகவும் மிகவும் சோர்வாக இருந்ததை அறிந்த அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு பால்ராஜ் உடலுறவில் ஈடுபட்டதை கூறியுள்ளார். உடனே இச்சம் வம் குறித்து அவர் குன்னம் போலீசில் புகார் அளித்தார் புகாரை ஏற்று இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்கு பதிவு செய்து பால்ராஜ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
