பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி – 27ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்பட்டன. மேலும் விவசாயிகள் தெரிவிக்கையில்...விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை, இதனால் விவசாயிகள்
கோரிக்கைகள், நிறைவேற்ற படாமல் போகிறது மேலும் விவசாயிகள் கூட்டத்தை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே அனைத்து துறை அதிகாரிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இனி கலந்து கொள்ள வேண்டும். தமிழகத்திலேயே ,பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அததிகமாக மக்காசோளம் பறிப்படுகிறது . இதில் மக்காசோளம் கொள்முதல் செய்யும், இடைதரகள், எடை மோசடியிலும், மற்றும் கொள்முதல் விலையை மிகவும் குறைத்தும் வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படுகிறது, இதற்காக அரசு சார்பில் எடை மேடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். .விவசாயிகள் தங்களுக்கு உண்டான கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்பிரியாவிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.