தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்களின் வீர மரணத்தை போற்றும் வகையிலும் தீயணைப்பு துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி நீத்தார் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்தின் முன்பு நீத்தார் நினைவுத்தூண் அமைக்கப்பட்டது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் உதயகுமார் மற்றும் தீயனைப்பு வீரர்கள் மலரஞ்சலி அஞ்சலி செலுத்தினர். பின்னர்
பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு படை வீரர்களின் பெயர் விவரங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும் நீத்தார் நினைவு நாளையொட்டி தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தீத்தொண்டு வாரம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. வரும் 20-ந் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட உதவி அலுவலர் ஹக்கீம் பாஷா மாவட்ட நிலை அலுவலர் உதயகுமார் உட்பட தீர்ப்பு மீட்பு துறை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.