ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் ஆயிரம் ரக்கத் தொகை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் தரமான கரும்புகளை கொள்முதல் செய்வதற்காக இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் நகராட்சிக்குட்பட்ட அபிராமபுரம் பகுதியில் உள்ள கரும்பு வயல்களில் இன்று (8.1.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் கற்பகம் நிருபர்களிடம் கூறியதாவது…. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தரமான கரும்புகளை கொள்முதல் செய்யும் வகையில் இன்று ஆய்வு செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து தரமான கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் 1,90,912 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளார்கள். இவர்களில் ஒன்றிய, மாநில அரசு அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைக்காரர்கள், பொருள் இல்லா அட்டைதார்கள் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் ஒன்றிய மாநில அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ள அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 1,72,502 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
உங்கள் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 10 ஆம் தேதி முதல் 13ஆம் தேதிக்குள் தகுதியுடைய அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும்.