பெரம்பலூர் அருகே உள்ள கவுல்பாளையம் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மின் மோட்டார் பழுதடைந்த காரணமாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை இதனால் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாயிகளிடம் அவர்கள் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் பெரம்பலூர் – அரியலூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த வருவாய் வட்டாட்சியர் அலுவலர் மற்றும் பெரம்பலூர் உட்கோட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்க்கப்படும் என்று உறுதியளித்தத்தின்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது .சாலை மறியல் போராட்டத்தினால் அரியலூர் பெரம்பலூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.