பெரம்பலூர் அருகே உள்ள சித்தலி ஊராட்சியில் பீல்வாடி கிராமத்தில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆர்ஓ சிஸ்டம் பழுதான நிலையில் 8 மாதங்களாக சரி செய்யாமல் இருப்பதினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக ஊராட்சி மன்ற தலைவர் ராஜா கவுன்சிலர் பிச்சப்பிள்ளை ஆகியோரிடம் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .இந்நிலையில் கடந்த 14 .12. 23ஆம் தேதி வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரை அலுவலகத்தில் சந்தித்து எங்கள் கிராமத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ சிஸ்டம் இயங்கவில்லை இது சம்பந்தமாக புகார் கொடுத்தும் எந்த அதிகாரியும் கண்டு கொள்ளவில்லை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தும் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் மெத்தன போக்கை கண்டித்து பீல் வாடி கிராமத்தில் இன்று காலை அரசு பேருந்து சிறை பிடித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர் எஸ் சிஸ்டம் சரி செய்யும் வரை இந்த போராட்டம் கைவிட மாட்டோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ஆர்எஸ் சிஸ்டம் இயங்கவில்லை…பொதுமக்கள் சாலை மறியல்..
- by Authour
