பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. விடுத்துள்ள அறிக்கையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஆணைப்படி, மாவட்ட செயலாளர் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார். அதன்படி பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக டி. களத்தூர் வெ. கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்கள்- எசனை குணசேகரன், மனோகர், மு.செங்குட்டுவன், பொ. சுரேஷ், சா. வெற்றிவேல், முனைவர் செ. சாம்ராஜ், ரகு பிரனேஷ்.
