தி.மு.க. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டம், பாலக்கரையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில்
மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கழகச்செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் – பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி,டாக்டர் செ.வல்லபன், இரா.ப.பரமேஷ்குமார், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், என்.ஜெகதீஸ்வரன், எஸ்.அண்ணாதுரை, பட்டுச்செல்வி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன்,
ஒன்றிய கழக செயலாளரகள் என்.கிருஷ்ணமூர்த்தி, எம்.ராஜ்குமார், எஸ்.நல்லத்தம்பி, தி.மதியழகன், வீ.ஜெகதீசன், சோமு.மதியழகன், சி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனாஅண்ணாதுரை,
பிரபா செல்லப்பிள்ளை, க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர்கள் சாந்தாதேவிகுமார், எம்.ரெங்கராஜ்,
பேரூர் கழக செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர்.ரவிச்சந்திரன், செல்வலட்சுமி சேகர்,ஜாஹிர் உசேன்,
பேரூராட்சி தலைவர்கள் சங்கீதா ரமேஷ், வள்ளியம்மை ரவிச்சந்திரன்,
பாக்கியலட்சுமி செங்குட்டுவன், துணை தலைவர்கள் செல்வலட்சுமிசேகர், எ.ரசூல்அகமது,
சரண்யா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளரும்- அரசு குற்றவியல் வழக்கறிஞர் பா.செந்தில்நாதன்,
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் டாக்டர் அ.கருணாநிதி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சி.காட்டுராசா, ஏ.எம்.கே.கரிகாலன், டி.ஆர்.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர்கள் எசனை ஆறுமுகம், மு.விஜயரத்தினம், மாவட்ட பிரதிநிதி எஸ்.அழகுவேல், வனிதாசுப்ரமணியன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ஆர்.அருண், ரா.சிவா, மா.பிரபாகரன், அன்புச்செல்வன், ஆர்.கணேசன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
1- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி ஜீன் மாதம் சென்னையில் நடைபெறுகிறது.அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது எனவும்,
2- ஜீன்- 03 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும்,
3- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை ஒரு வருடத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது எனவும்,
4- ” உடன் பிறப்புகளால் இணைவோம்” மூலம் அதிகளவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது எனவும்,
5- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா குழுவில், கழக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி.,யை, நியமனம் செய்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர்,கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.